21/1/14

ஹிட் கணக்கு

தமிழில் எழுதுபவர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் இந்த ஹிட் கணக்குதான். ரொம்ப கஷ்டப்பட்டு எழுதினாலும் பெரிய கவனம் இருக்காது - என்னென்னவோ சமாதானம் சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. 

இன்றைக்கு ஒரு ஆச்சரியமான செய்தி படித்தேன். Thestoryprize.org என்ற தளம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது. அவர்களும் ஒரு வலைதளம் வைத்திருக்கிறார்கள். அங்கு இன்றைக்கு இப்படி ஒரு இடுகை இட்டிருக்கிறார்கள் : 

 For the fourth straight year, in 2013 The Story Prize invited each author of a collection we received as an entry to contribute a guest post to our blog. Out of 94 authors, 62 chose to participate. We thank them for their thoughtful , interesting contributions. Since 2010, when we began doing this, TSP has featured 266 guest posts from 263 writers. 

According to Blogger's statistics, every author post received at least 100 page views, with most getting 300 or more and the most active page (Jess Walter's) so far drawing more than 1,200 hits. The posts with the second and third most hits this year were Edwidge Danticat's and George Saunders'. The links, in alphabetical order by the author's last name, are to each guest post. 

இதைப் படித்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிக அளவில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் வாய்ப்புகளை அளிக்காத, கனமான விஷயங்களுக்கு குறைவான வாசகர்கள்தான் இருப்பார்கள் என்ற என் எண்ணத்தை உறுதிபடுத்துகிறது இது. தமிழாவது பரவாயில்லை, உலகில் எத்தனை பேர் ஆங்கிலம் படிக்கிறார்கள், George Saunders எழுதிய பதிவுகூட 1200 தாண்டவில்லை என்றால் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. 


இவர்கள் சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் நூறு நோக்கர்கள், பலவற்றுக்கும் முன்னூறு நோக்கர்கள் என்ற கணக்கு சொல்கிறார்கள். ஒப்பீட்டில் எனக்கு தெரிந்த மூன்று தமிழ் தளங்களில் எதுவும் இதை ஒப்பு நோக்கும்போது பெரிய அளவில் சோடை போகவில்லை என்று நினைக்கிறேன். 

பதினொன்றாம் பரிமாணத்தைப் பொருத்தவரை சராசரியாக இருபது முதல் முப்பது நோக்கர்களுக்கும், சில பதிவுகள் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கின்றன என்பதையும் இளம் இலக்கிய விமரிசகர் கோபி ராமமூர்த்தி வாசித்தேயாக வேண்டிய வலைதளம் என்று வலைச்சரத்தில் பரிந்துரைத்திருக்கிறார் என்பதையும் தகவல்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.